மேடையில் செல்பி ; கார்த்தியை கடுப்பேற்றிய கஸ்தூரி


ஏற்கனவே நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முனைந்த இரண்டு பேரின் செல்போன்களை தட்டிவிட்டு, தற்போது தான் அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.. அதற்கே விளக்கம் சொல்லி அவரது மகன் நடிகர் கார்த்தியால் யார் மாள முடியவில்லை

இந்த நிலையில் நேற்று ஜூலை காற்றில் என்கிற படவிழாவில் சிறப்பு விருந்தினராக கார்த்தி கலந்து கொண்டார். இந்த விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன் என்கிற பெயரில் அறுத்து தள்ளிக்கொண்டிருந்தார் நடிகை கஸ்தூரி. அதையும் பொறுத்துக் கொண்டுதான் கார்த்தியும் இன்னொரு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கே.எஸ்.ரவிக்குமாரும் அமைதியாக சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் கார்த்தியை பேச அழைத்த கஸ்தூரி அவர் மைக்கின் அருகில் வந்தவுடன், சார் உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டு கார்த்தி அனுமதிக்கும் முன்பே அதான் சிவகுமார் சார் இல்லையே என கூறியபடி, டக்கென ஒரு செல்ஃபி எடுத்தார்.. உடனே கார்த்தியின் முகத்தில் கடும் கோபம் எட்டிப் பார்த்தது..

“இதுதான் அநாகரிகமான பழக்கம்.. ஒருத்தரிடம் கேட்காமலேயே செல்பி எடுப்பது.. அவர் முகத்திற்கு நேராக போனை கொண்டு வந்து ஃப்ளாஷ் அடித்து டார்ச்சர் செய்வது.. இது எல்லாம் எந்த விதத்தில் நியாயம்.. மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்” என பொரிந்து தள்ளினார்.

அதன்பிறகு பேசிய கஸ்தூரி இப்படித்தான் எங்களைப் போன்ற பிரபலங்கள் வெளியே செல்லும்போது இதுபோன்ற செல்பி தொந்தரவுகளை ரசிகர்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று என்னவோ அதை விளக்குவதற்காகவே தான் கார்த்தியுடன் செல்பி எடுத்தது போல அப்படியே உல்டாவாக சீனை மாற்றிப்போட்டார்.. ஆனாலும் வைரலுக்காகவே அவர் அப்படி செய்துள்ளார் என்பது நன்றாகவே தெரிந்தது

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *