மயிரிழையில் உயிர் தப்பித்த கீர்த்தி சுரேஷின் பாட்டி..!

சமீபத்தில் பெய்த அடைமழையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சினிமா நட்சத்திரங்களை கூட பாகுபாடு இல்லாமல் விரட்டியிருக்கிறது. நடிகை லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோரை மீட்பு குழுவினர் மீட்டு படகில் ஏற்றி சென்ற காட்சியெல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியானது.

ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இந்த மழை தந்ததோ வேறுவித பயங்கர அனுபவம்.. அவரது பாட்டியை அறுவை சிகிச்சைக்காக மியாட் ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்களாம். சிகிச்சைக்கு முதல் நாள் மழையால் கரண்ட், ஜெனரேட்டர் வசதிகள் கட்டானதால் ஆக்சிஜன் தீர்ந்துவிடவே, ஆபரேசனை தள்ளி வைத்துவிட்டார்களாம்.

அதனால் பேசாமல் அவரது பாட்டியை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார்களாம். மறுநாள் பார்த்தால் அந்த மருத்துவமனையில் ஐ.சி.யூவில் வைக்கப்பட்டிருந்த 17 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணமடைந்த செய்தி வெளியானது. தனது பாட்டிக்கும் ஆபரேஷன் நடந்திருந்தால் ஐ.சி.யூவில் தானே இருந்திருப்பார். நல்லவேளை கடவுள் தான் அவரை காப்பற்றி அனுப்பினார் என கண்ணீர் விடுகிறார் கீர்த்தி சுரேஷ்.