அஜித்துடன் நடித்தால் அவர் மாதிரி கணவன் வேண்டும் என்று சொல்வாரோ கீர்த்தி சுரேஷ்


சமீபகாலமாக அதிக படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம், விஜய், அஜித், விக்ரம், சிம்பு, சூர்யா என அனைவரின் புகைப்படங்களையும் காட்டி இதில் உங்களுக்கு வரப்போகும் கணவர் யார் போல இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சற்றும் தயங்காத கீர்த்தி சுரேஷ் விஜய் மற்றும் விக்ரம் போல எனக்கு வரப்போகும் கணவர் இருக்க வேண்டுமென கூறி அவர்களை அதிர வைத்துள்ளார் ஒருவேளை அடுத்த வருடம் அஜீத்துடன் நடித்து விட்டபின் இதே கேள்வியை அவரிடம் கேட்டால் அஜித் போல கணவர் வேண்டும் வர வேண்டும் என சொல்லுவாரோ என்னவோ..?