எதிர்பாராத சிக்கலில் லட்சுமி ராமகிருஷ்ணன்..?


ரோட்டோர பஸ் ஸ்டாப்புல சிவனேன்னு பஸ்சுக்கு காத்திருந்தவங்க மேல, லாரி மோதி பலியான சம்பவம்லாம் பேப்பர்ல படிக்கிறோம் தானே.. அதேமாதிரித்தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை இப்போ தேவையில்லாத சிக்கல் ஒண்ணு வலைக்குள்ள இழுக்க பார்க்குது..

வேறொன்னுமில்ல… அவரது பேமஸ் டயலாக்கான ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா’ வசனத்தை ஆளாளுக்கு பல இடங்களில் தங்களுக்கு தக்கவாறு பயன்படுத்தி வந்தார்கள்.. இப்போது அரசியலிலும் இந்த டயலாக் புகுந்துவிட்டது.. ஆம்.. தமிழக முதல்வரை கிண்டலடிக்கும் விளம்பர வாசகங்களில் இந்த டயலாக்கைத்தான் பயன்படுத்தியுள்ளது திமுக.

இது ஒருபக்கம் அ.தி.மு.க.காரர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.. இன்னொரு பக்கம் இந்த வசனம் அப்படி பயன்படுத்தப்பட்டு இருப்பது தனக்கு பெருமை அளிப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து சொன்னதாக வெளியான செய்திகள் அதிமுக வட்டாரத்தில் இன்னும் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.. இதை கேள்விப்பட்டு பதறிய லட்சுமி ராமகிருஷ்ணன், நான் அப்படி சொல்லவே இல்லை என மறுப்பு கூறிவருகிறார்.