மகேந்திர பாகுபலி ஆணல்ல.. ஒரு பெண்..!


கடந்த மாத இறுதியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பாகுபலி.. இந்தப்படம் வெளியானபின் இந்தப்படத்தில் நடைபெற்ற, இடம்பெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாகுபலியின் மகன் மகேந்திர பாகுபலி ஆண் அல்ல.. பெண் என்பது..

அதிர்ச்சியடைய வேண்டாம்.. பாகுபலி முதல் பாகத்தில் சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) குழந்தை மகேந்திர பாகுபலியை காப்பாற்ற ஓடிவந்து உயிரையும் விடுவாரே, அந்த குழந்தையாக நடித்தது ஒரு ஆண் குழந்தையல்ல.. பெண் குழந்தை தான்..

அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் கேரளாவிலேயே படமாக்கப்பட்டதால் அந்த நேரத்திற்கு படத்தில் வேலை பார்த்த கேரளாவை சேர்ந்த புரடக்சன் மேனேஜர் ஒருவரின் பதினெட்டு மாத குழந்தையை கொண்டுவந்து அந்த காட்சியில் நடிக்க வைத்து விட்டார்களாம்.