முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி வழங்கிய மகேஷ் பாபு!


உலகையே ஆட்டிப்படைத்த கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் 21 நாட்கள் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.

இதனால் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் வேலை செய்பவர்கள், கட்டிட தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர்.

இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இதுவரை பவன் கல்யாண் ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தற்போது மகேஷ் பாபுவும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *