ஹீரோயினுக்கு லிப்கிஸ் கொடுக்க மனைவியிடம் அனுமதி கேட்ட நடிகர்..!


சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக ‘அபியும் அனுவும்’ என்கிற படம் வெளியானது. மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார்.. பெண் இயக்குனரான பி.ஆர்.விஜயலட்சுமி இந்தப்-படத்தை இயக்கியுள்ளார்..

ஆனாலும் படத்தில் நாயகன் நாயகி இருவருக்கான லிப்லாக் முத்தக்காட்சிகளை அடிக்கடி இடம்பெறச்செய்து அதிரவைத்திருந்தார் இயக்குனர்.. டொவினோ தாமஸிடம் இந்த காட்சியில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளீர்களே உங்கள் மனைவியின் ரியாக்சன் என்ன என கேட்டால், இந்த முத்தக்காட்சியில் அவரது அனுமதி பெற்றுத்தான் நடித்தேன்.. அதனால் எந்தப்பிரச்சனையும் எழவில்லை” என்கிறார் சமாளிப்பாக