அக்டோபர்- 9 முதல் ‘மசாலா படம்’ பார்க்கலாம்!

சமீபத்தில் இசை வெளியீடு நடந்த ‘மசாலா படம்’ எல்லா தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. ‘மசாலா படம்’ தணிக்கை அதிகாரிகளால் சிறந்தப் படம் என பாராட்டப்பட்டு, ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதாக அலசப்படும் “சினிமா விமர்சனம்” என்றக் கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.

“நல்ல தரமான, ஜனரஞ்சகமான படங்களுக்கு எப்போதுமே வரவேற்ப்பு உண்டு என்பதை மசாலா படம் நிரூபிக்கும். பாபி சிம்ஹாவின் ஆளுமையும் , மிர்ச்சி சிவாவின் இயல்பான நடிப்பும், இயக்குனர் லக்ஷ்மனின் திறமையான இயக்கமும் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பை பெற்று தந்துள்ளது. சகல வயதினரையும், சகல தரப்பினரையும் கவரும் வண்ணம் உருவாகி உள்ள ‘மசாலா படம்’ அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது” என படத்தை வெளியிடும் “AURAAS CINEMAS” நிறுவனம் தெரிவித்துள்ளது.