மப்பும் மந்தராமுமாக மயங்க வைக்கும் மாஸ்டர் நடிகை

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து, பேட்ட படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.. தற்போது லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளதன் மூலம் முன்னணி நடிகைகள் வரிசைக்கு வந்துவிட்டார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் சீந்துவதற்கே ஆளில்லாமல் ஏழு வருடம் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தவருக்கு, ரஜினி, விஜய் படங்களில் நடித்தால் சும்மா இருக்க முடியுமா..? அதனால் அவ்வபோது சோஷியல் மீடியாவில் அட்ராசிட்டி பண்ணி வருகிறார் அம்மணி.

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவார். இன்ஸ்ட்ராகிராமில் 2 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கூட இவர் பதிவிட்ட கவர்ச்சி போட்டோவிற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது.

இந்த நிலையில் தற்போது மாளவிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் உயர் ரக மது அருந்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “மாலை 5 மணிக்கு கார்டன் அண்ட் டானிக் (ஜின் வகை மது) புத்துணர்ச்சியூட்ட அழைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். சிலர் இதை ஆதரித்தும், “என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா” என்கிற அளவுக்கு விமர்சித்தும் வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *