12 மணி நேர படப்பிடிப்பில் முழு படம் “நடு இரவு”

24 மணி நேரத்தில் பல யூனிட், பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “சுயம்வரம்“ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம்.

அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு.

ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நடு இரவு” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே !

ஒளிப்பதிவு – உலகநாதன்

இசை – S.ரமேஷ் கிருஷ்ணா

எடிட்டிங் – விஜய் ஆனந்த்

கலை – C.P.சாமி

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா.

தயாரிப்பு – வி.எஸ்.மோகன்குமார்.

படம் பற்றி இயக்குனர் புதுகை மாரிசாவிடம் கேட்டோம்….

இம்மாதம் 19 ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்.மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம்.

பேய் சம்மந்தப் பட்ட கதை என்பதால் முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து.

முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார் என்றார் இயக்குனர் புதுகை மாரிசா.

இந்த படத்தின் துவக்க விழா தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு .கே.ஆர் மற்றும் திரு.ஜி.சேகரன் இயக்குனர் சக்திசிதம்பரம் ஆகியோர் தலைமையில் இன்று 15 – 09 – 2014 A.V.M. ஸ்டுடியோவில் நடைபெற்றது.