லட்சுமி ராமகிருஷ்ணனை சைக்கிள் கேப்பில் கலாய்த்த நலன் குமாரசாமி..!


தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை பற்றியோ அவரால் பேமஸாக மாறிப்போன ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்கிற டயலாக்கோ இல்லாமல் ஒரு படம் கூட வராது என்கிற நிலை இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படம்.

இந்தப்படத்தில் அடியாளாக இருக்கும் விஜய்சேதுபதியிடம் நடுத்தர வயதை தாண்டிய நபர் ஒருவர் தனது கள்ளக்காதல் பஞ்சாயத்துக்காக வருவார்.. வந்தது பிரச்சனையை தீர்க்கச்சொல்லி அல்ல.. தங்களது பிரச்சனைக்காக ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஸ்லாட் கேட்டதாகவும், பிரச்சனை அவ்வளவு ஒர்த் இல்லை என்பதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒதுக்கிவிட்டதாகவும் கூறி, எப்படியாவது நிகழ்சியில் பங்குபெற வாய்ப்பு வாங்கித்தருமாறு கோரிக்கை வைப்பார் அந்த நபர்.

ஆக, லட்சுமி ராமகிருஷ்ணனால் பேமஸான ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்கிற விஷயத்தை வைத்தால், அதையும் காமெடியாக்கி இரண்டு கைதட்டல்களையும் அள்ளலாம் என நலன் குமாரசாமி யோசித்ததில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது..?