சொன்னோம்ல அவங்க வரமாட்டாங்கன்னு ; ஆருடம் பலித்தது


டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராசிகண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நயன்தாராவுக்கும், ஒரு சைக்கோவுக்குமிடையே நடக்கும் அதிரடிப் போர் தான் இந்த படம். நயன்தாராவின் தம்பியாக அதர்வாவும், அவரது காதலியாக ராசி கண்ணாவும் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டபோதும் படத்தின் நாயகனான அதர்வா, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அதனால் படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியை முன்னிறுத்தி விழா நடைபெற்றது. இந்தப்படம் நன்றாக வந்திருப்பதாக திரையுலகில் பேசப்பட்டு வந்தது. அதனால் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நாநயன்தாரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் வழக்கம்போல அவர் இந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை.இதனால் மூத்த நாங்கதான் சொன்னோம்ல.. அவர் வரமாட்டார்னு” என பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *