காதலனை கைபிடிக்க டார்கெட் நிர்ணயித்த நயன்தாரா..!


நடிகை நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி வருகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர் லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா படங்கள் இருக்கின்றது.

இவை தவிர விஜய் – அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இது தவிர சுமார் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். எனவே இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கின்றனர்.

நயன்தாராவுக்கு இப்போது வயது 34 ஆகிறது. நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதும் ஒன்றாக வாழ்வதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுதான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை தொடுவதை இலக்காக வைத்துள்ளார். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைந்த பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாராம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *