அம்மன் படத்திற்காக விரதம் இருக்கும் நடிகை நயன்தாரா !


நயன்தாரா அடுத்ததாக ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:-

“நானும் ரவுடிதான் படத்தில் இருந்தே நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். இந்த படம் தொடர்பாக ஒரு நாள் மாலை வேலையில் அவரை சந்தித்து அரை மணிநேரம் இந்த கதையை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இது முழுக்க முழுக்க பக்தி படம். சமீப காலமாக தொடர்ந்து பேய் படங்களாக வருகிறது. சாமி படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. நான் சாமி நம்மிக்கை உடையவன் அதனால் இந்த படம் எடுக்க முடிவு செய்தேன். இந்த படத்தில் ஒரு செய்தியையும் நான் சொல்லவிருக்கிறேன்.

இந்த படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்துக்கொடுப்பதாக தெரிவித்தார். படம் தொடங்கவிருக்கிறது இப்போதே படக்குழுவினர் பயபக்தியோடு அசைவ உணவகங்களை தவிர்த்து சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பவானி அம்மனின் இன்னொரு பெயர் ‘மூக்குத்தி அம்மன்’ அதனால் இந்த பெயரை வைத்தேன்” என்றார்.

இந்நிலையில் நேற்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாராவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *