சிவகார்த்திகேயன் படத்துக்கு புதிய சிக்கல்..!


ஒரு படத்தின் தணிக்கைக்கு 65 நாட்கள் என தணிக்கை வாரியம் காலம் நிர்ணயித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் ராஜா தயாரிப்பில் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. அதனால், இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. எனவே இதுவரை சென்சாருக்கு அப்ளை பண்ணவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஒரு படத்தின் தணிக்கைக்கு 65 நாட்கள் என தணிக்கை வாரியம் காலம் நிர்ணயித்துள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதிக்கு இன்னும் 37 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் வேலைக்காரன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா குறித்த தேதியில் ரிலீஸாகி விடுமா என்கிற சந்தேகம் படக்குழுவினர் மத்தியில் எழுந்துள்ளது.