விஸ்வாசத்தை பின்னுக்குத் தள்ளி 3ஆம் இடம்பிடித்த என்ஜிகே


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று என்ஜிகே படம் வெளியானது. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் செல்வராகவன் தரப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சில மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவை பொறுத்தவரை எப்படியாவது இந்த படம் வெளியானால் போதும் என்ற மன நிலையுடன்தான் இருந்தார்.

ஆனால் நேற்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் முதல் நாள் சென்னையில் மட்டும் 1.03 கோடி வசூலித்து மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படம் 1.17 கோடியும், ரஜினியின் பேட்ட படம் 1.12 கோடியும் அஜித் விசுவாசம் படம் 88 லட்சமும் வசூலித்து முதல் மூன்று இடங்களில் இருந்தன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள என்ஜிகே படம் சென்னையில் 1.03 கோடி வசூலித்து முதல் நாள் வசூலில் ஆச்சரியப்படுத்தியது உள்ளது. மேலும் ஓபனிங் ஸ்டார் எனப்படும் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.