“கன்னித்தன்மை இருந்தால் மட்டும் தான் என் கதையை டைரக்ட் பண்ணமுடியும்” ; இயக்குனர் சவால்..!


யார் வேண்டுமானாலும் என் படத்தை அவ்வளவு ஈஸியாக ரீமேக் செய்துவிட முடியாது. அதற்கு முக்கியமான ஒரு தகுதி வேண்டும் என தன்னிடம் ரீமேக் ரைட்ஸ் கேட்கும் நிறுவனங்களுக்கு வித்தியாசமான நிபந்தனை விதித்துள்ளார் மலையாள இயக்குனரான அல்போன்ஸ் புத்ரன்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா ‘பிரேமம்’ என்கிற பெயரிலேயே இதை ரீமேக் செய்து நடித்தார்.. ஆனால் நாகசைதன்யா மட்டுமல்லாமல் அதில் மலர் டீச்சராக நடித்த ஸ்ருதிஹாசன் முதற்கொண்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகினர். படமும் சொதப்பலாகவே அமைந்துவிட்டது. இதை தெலுங்கில் இயக்கியவர் சந்து மொண்டேட்டி என்கிற இயக்குனர்.

இதனால் இனி வேறு மொழிகளில் பிரேமம் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் இயக்குனர்களுக்கு மலையாளத்தில் அதை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் வித்தியாசமான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். பிரேமம் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக பாலிவுட்டின் டாப் ஐந்து நிறுவனங்கள் அவரை அணுகினார்களாம்.

அதில் இரண்டு நிறுவனங்கள் தங்களிடம் மிகச்சிறந்த இயக்குனர்கள் இருப்பதாகவும் பிரேமம் படத்தை மிகச்சிறப்பாக கொண்டுவந்துவிடுவோம் என கூறினார்களாம். அதற்கு அல்போன்ஸ் புத்ரன் சொன்ன நிபந்தனை என்ன தெரியுமா..?

இந்தப்படத்தை இயக்கும் வரை நான் கன்னித்தன்மை கொண்டவனாகவே இருந்தேன்.. அதனால் படத்தில் காதல் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்க முடிந்தது.. இந்தப்படத்தின் சிறப்பே, படத்தின் எந்த காட்சியையும் பர்பெக்சன் அல்லாமல் எடுத்தது தான். அதனால் இந்தப்படத்தை ரீமேக் செய்து இயக்குபவர்கள் 31 வயதானாலும் கூட கன்னித்தன்மை இழக்காதவர்களாக இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வரும்” என கூறியுள்ளார்.