ரஜினிகாந்துடன் பி.வி.சிந்து தலைவர் 168படப்பிடிப்பில் சந்திப்பு


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில நடைபெற்றது. பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரஜினி அடுத்ததாக சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் குஷ்பு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். பி.வி.சிந்து ரஜினியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.