மட்டன் பிரியாணி தின்னுக்கிட்டு மாட்ட பத்தி பேசுறியா..? ; பாண்டிராஜ் செருப்படி பேச்சு..!


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமே சேர்ந்து கூட்டு வைத்த போதும் விலங்குகள் னால அமைப்பு என சொல்லிக்கொள்கிற பீட்டா என்கிற அமைப்பு இன்னும் அடங்கிய பாடில்லை. குறிப்பாக திரைப்படங்களில் விலங்குகள் இடம்பெறும் காட்சிகளை எப்படியாவது தடை செய்துவிட வேண்டும் என்பதில் ரொம்பவே குறியாக இருக்கிறது பீட்டா.

சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேஸிலும் தன் கைவரிசையை காட்டி அந்த காட்சியையே தூக்க முயற்சித்ததாம் பீட்டா. ஒருவழியாக தயாரிப்பாளர் போராடி அந்த காட்சியை இடம்பெற செய்தாலும், அதிலும் ஒரு நிமிட காட்சியை வெட்ட வைத்தபின்பே சென்சாருக்கு அனுமதித்ததாம் பீட்டா.

இந்த விஷயம் பற்றி கடைக்குட்டி சிங்கம் பட வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ் பொங்கி தள்ளிவிட்டார். இதுபற்றி பாண்டிராஜ் பேசியபோது, படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள்.

எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது ? அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது ? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க ? மட்டன், சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும்” என செருப்படியாக கேள்விகளை வீசினார்