பிச்சைக்காரனும் தியேட்டர் ரகளையும்…!


விஜய் ஆண்டனி நடித்துள்ள நான்காவது படம் ‘பிச்சைக்காரன்’.. நாளை கிட்டத்தட்ட 500 தியேட்டர்களில் வெளியாகும் இந்தப்படத்திற்காக எப்படியெல்லாம் புரமோஷன் செய்யலாம் என யோசித்த விஜய் ஆண்டனி, தனது ஐடியா ஒன்றை வீடியோவாக்கி அதை சோஷியல் மீடியாவில் பரவ விட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் கமலா தியேட்டர் பார்க்கிங்கில் வண்டியை பார்க் செய்பவர்கள் பிச்சைக்காரன் என சொல்வதும் அதை தியேட்டர் பையன் கலாய்ப்பதும் என கான்ட்ரவர்சியாக ஒரு வீடியோவை சூட் பண்ணி, பைனல் டச்சாக தானும் வந்து வான்டட் ஆக கலாய் வாங்குகிறார் விஜய் ஆண்டனி.. எது எப்படியோ இந்த அப்ரோச் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றே தெரிகிறது.