தயவுசெய்து அந்தப்படத்தில் மட்டும் நடிக்க அழைக்காதீர்கள் ; பதறும் அரவிந்த்சாமி


அரவிந்த்சாமி நடித்துள்ள படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆமளாபால் கதாநாயகியாக நடிக்க, பேபி நைநிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அம்ரேஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் வரும் மே-11ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திட்டமிட்டபடி ஏப்-27ஆம் தேதி வெளியாகவேண்டிய இந்தப்படம் இரண்டு வாரம் கழித்து வெளியாவது ஏன், இந்தப்படத்தில் நடித்த அனுபவம், அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுக்கும் விதம் ஆகியவை குறித்து மனம் திறந்து பதிலளித்தார் நடிகர் அரவிந்த்சாமி.

திரையுலக போராட்டத்திற்கு நன் எதிரானவன் அல்ல.. நான் டிவிட்டரில் பதிவிட்டதும் அந்த அர்த்தத்தில் அல்ல. சினிமாவை நம்பி நிறைய தினக்கூலி தொழிலாளர்கள் இருப்பதால் சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என கூறினேன்.. அவ்வளவுதானே தவிர, இதில் உள்நோக்கமோ, எதிர்மறை கருத்தோ எதுவும் இல்லை..

சீனியாரிட்டி அடிப்படையில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்திற்கு ஏப்-27ஆம் தேதி ரிலீஸ் தேதி எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ஆனால் அவெஞ்செர்ஸ், உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரிலீசாவதால் நாங்கள் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அதனால் தான் மே-11ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம்..

என்னைப்பொறுத்தவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன், வில்லனாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் ஒருபோதும் சொல்வதில்லை. ஆனால் தயவு செய்து ஹாரர் கதைகளில் நடிக்கமாட்டேன்.. கடவுளை கும்பிடுவது இல்லை என்பதால் பேய்களையும் நம்புவதில்லை.. பேய்ப்படங்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கும்’ என் கூறினார்.