ரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..!


தீபாவளி சமயத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என தவித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. காரணம் தான் நடித்த திமிரு புடிச்சவன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே தீருவேன் என அடம்பிடித்து தேதியை கேட்டு வாங்கினார் விஜய் ஆண்டனி. ஆனால் சர்காருடன் மோத முடியாமல், போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அந்தப்படத்தை திட்டமிட்டபடி அவரால் ரிலீஸ் செய்யமுடியவில்லை.

ஆனால் அதன்பின் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி இன்னொரு ரிலீஸ் தேதி கேட்காமல், அவர்களாகவே மீண்டும் ஒரு தேதியை தீர்மானித்து படத்தை வெளியிட்டனர். படமும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதேசமயம் மற்ற சின்னப்படங்களுகாக ஒதுக்கியிருந்த அந்த தேதியில் தங்களை மீறி படத்தை ரிலீஸ் செய்ததற்காக விஜய் ஆண்டனிக்கு தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட்கார்டு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பெப்சிக்கு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதிவிட்டதால் விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களுக்கு பெப்சி தங்களது ஆட்களை அனுப்பமாட்டேன் என கூறிவிட்டதாம். இதனால் அவரது படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே அம்போவென நிற்கின்றனவாம். தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடையாய் நடக்கிறாராம் விஜய் ஆண்டனி.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *