மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை?


நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார் போனிகபூர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை டைரக்டு செய்த வினோத் இயக்குகிறார். மீண்டும் இணைந்துள்ள இக்கூட்டணியால் ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது அஜித்திற்கு 60-வது படமாகும். இதில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்திக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற வெற்றிப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். நயன்தாரா ஏற்கனவே அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் அஜித் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பதில் சிறிது சிக்கல் எழுந்துள்ளது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் மற்ற நடிகர், நடிகையர் தேர்வில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.