மகளுக்கு தடைபோட்ட பிரபு சாலமன் தான் மட்டும் இப்படி பண்ணலாமா..?

மைனா, கும்கி படங்கள் மூலம் கேரளாவை சேர்ந்த அமலாபால், லட்சுமி மேனன் ஆகியோரை தமிழில் அறிமுகம் செய்து முன்னணி நடிகைகளாக மாற்றியவர் இயக்குனர் பிரபு சாலமன்..ஆனால் பிரபு சாலமனின் மகள் ஹசிலி ஷைனிக்கும் நடிக்கும் ஆர்வம் ரொம்பவே இருப்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் நன்றாகவே தெரிகிறது. டிக்டாக் மற்றும் டப்மாஸ் வீடியோக்களில் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களால் நிறைய ரசிகர்களை பாலோயர்களாக பெற்றுள்ளார் ஹசிலி ஷைனி.

ஆனால் என்னதான் இயக்குனர் என்றாலும் மகளின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் பிரபு சாலமனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். இது நம் மதத்திற்கு எதிரான ஒன்று என்பதால், நம் குடும்பத்திற்கு இதெல்லாம் பொருத்தமானது அல்ல என மகளுக்கு அட்வைஸ் செய்தாலும் மகளின் சுதந்திரத்தில் குறுக்கிடவும் விரும்பவில்லையாம் பிரபு சாலமன்.

இந்நிலையில் அழகிய கண்ணே என்கிற படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகளுக்கு நடிப்புக்கு தடைபோட்ட பிரபு சாலமன் தான் மட்டும் நடிகராக மாறியது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள் ரசிகர்கள்..