என்னடா இது.. இந்த பிரபுசாலமனுக்கு வந்த சோதனை..!


புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கிவரும்வரை ராஜா மாதிரி அசைக்க முடியாமல் இருந்தார் இயக்குனர் பிரபு சாலமன். ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என வரிசையாக ஹிட் படங்களையும், நல்ல நடிகர் நடிகைளையும் தமிழுக்கு தந்துகொண்டு இருந்தார்.. ஆனால் என்றைக்கு தனது ரூட்டில் இருந்து விலகி தனுஷ் படத்தை இயக்க ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்துதான் கஷ்டகாலம் அவரைப்பிடித்து ஆட்டுகிறது என்கிறார்கள்.

கிட்டத்தட்ட தனுஷ் நடிக்கும் ரயில்’ படத்தை இயக்கி முடித்துவிட்ட பிரபுசாலமன் முழுப்படத்தையும் தனுஷுக்கு போட்டுக்கட்டினாராம். ஆனால் படத்தை பார்த்த தனுஷுக்கு முழு திருப்தி வரவிலையாம். நிறைய மாற்றங்களை செய்யச்சொல்லி, ரீ-ஷூட் பண்ண சொல்லிவிட்டாராம். தான் உருவாக்குவதுதான் கதை என்று கம்பீரமாக இருந்த பிரபு சாலமன், தனுஷ் படத்தை இயக்கி தனது மரியாதையை இப்படி அவராகவே குறைத்துக்கொள்கிறாரே என வருத்தப்படுகிரர்கலாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.