மகாபலிபுரத்தில் ‘புலி’ இசைவெளியீட்டு விழா ; உஷாரான விஜய்..!

விஜய் தனது படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு படும் பாட்டில் பாதியளவு அவரது படங்களின் ஆடியோ ரிலீசுக்கும் செலவு பண்ண வேண்டியிருக்கிறது.. காரணம் விஜய்யின் ‘தலைவா’ பட இசைவெளியீட்டின்போது சிலர் பேசிய வார்த்தைகள்தான் தேவையில்லாத சில பிரச்சனைகளுக்கு அப்போது வாசலை திறந்து விட்டதாம்.

குறிப்பாக அந்தப்படத்தில் நடித்த சத்யராஜ் பேசும்போது, விஜயை புகழ்கிறேன் என்கிற பேரில், அரசியலுக்கு வருவதற்குண்டான எல்லா தகுதியும் விஜய்க்கு இருக்கிறது என கொளுத்திப்போட, அதனால் ஏற்பட்ட அரசியல் களேபரங்களால் தலைவா படமே பற்றி எரிந்து சாம்பலானது. அதனால் தான் அடுத்த படமான ‘ஜில்லா’வின் இசை வெளியீட்டை சிம்பிளாக முடித்துவிட்டு அன்றைய தினமே கடைகளிலும் ஆடியோ விற்பனையை ஆரம்பித்தார்கள்.

ஆனால் ‘கத்தி’ படம் இலங்கை தொடர்பான பிரச்சனையில் சிக்கினாலும் கூட பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பயங்கரமான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் அதன் ஆடியோ ரிலீஸை பிரமாண்டமாக நடத்தினார்கள். இருந்தாலும் இப்போது அந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பாத விஜய், இந்தமுறை தான் நடித்துள்ள ‘புலி’ படத்தின் இசையை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வைத்து நடத்த முடிவு செய்துள்ளாராம்..

விழாவை எங்க நடத்துனா என்னங்க..? விழாவுல பேசுறப்ப வருங்கால முதல்வர் ரேஞ்சுக்கு தேவையில்லாம வார்த்த்தைகளை விடாம பேசுனா என்ன பிரச்சனை வந்துரும் என கேட்கிறார்கள் நடுநிலை ரசிகர்கள்.