விஷாலுக்கு எதிராக போட்டியிடுவதில் ராதிகாவுக்கு சிக்கல்


தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கான தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. விஷால் அணிக்கு எதிராக போட்டியிட்டு கடந்த முறை நடிகர் சங்கத்தில் தனது கணவர் சரத்குமார் மண்ணைக் கவ்வியதால் இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் விஷால் மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நடிகர் சங்க தேர்தலில் இன்று போட்டியிட தயாராகி வருகிறாராம் நடிகை ராதிகா.

இதற்காக தீவிரமாக தனது ஆதரவாளர்களுடன் காய் நகர்த்தி வருகிறாராம் ராதிகா. அதேசமயம் ராதிகாவும் அவரது கணவர் சரத்குமாரும் தயாரிப்பாளர் ஒருவருக்கு கொடுத்த செக்குகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதால் அவர்கள் மீது செக் மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது இது ராதிகாவின் இமேஜை டேமேஜ் பண்ணும் என்பதால் ராதிகாவுக்கு பதிலாக எதிர்த்தரப்பில் வலுவான வேறு யாரையாவது நிறுத்துவார்கள் என்றே தெரிகிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *