ஸ்ரீரெட்டியை திசை திருப்பிவிட்ட ராகவா லாரன்ஸ்..!


தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவில் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பிரபலங்களின் பெயரை வெளியிட்டார் இதில் கொஞ்ச நாட்கள் அமைதி காத்த ராகவா லாரன்ஸ் பின் தனது மௌனம் கலைத்தார்.

“ஸ்ரீரெட்டி பிரச்னை பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 7 வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்ததாக கூறியுள்ள ஸ்ரீரெட்டி . இத்தனை ஆண்டுகள் இதைப் பற்றி கூறாமல் இப்போது ஏன் கூறுகிறார் என்று தெரியவில்லை . ஸ்ரீரெட்டியின் மீது எனக்கு கோபம் இல்லை. அவரது எல்லா பேட்டிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அதில் பலரும் அவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றியதாக கூறியிருக்கிறார்.

அவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன். சில காட்சிகளை சொல்கிறேன் நடித்து காட்டுங்கள், சில எளிய நடன அசைவுகளை சொல்கிறேன் ஆடிக்காட்டுங்கள். அதில் நீங்கள் தேர்வாகிவிட்டால் எனது அடுத்த படத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன். இப்படிச் சொல்வது உங்கள் மீதுள்ள பயத்தால் அல்ல, அனுதாபத்தால் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

ஸ்ரீரெட்டியும், லாரன்ஸின் சவாலை ஏற்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ்க்கு என தலைப்பிட்டு ஒரு வீடியோவை ஸ்டைலாக போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் அஜித்தின் ஆலுமா டோலுமா, விஜய்யின் நீதானே நீதானே என்ற பாடல்களை டப் மாஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி பிரச்சனை இந்த அளவுக்கு வந்துவிட்டதால் எப்படியோ லாரன்ஸ் மாஸ்டர் மூலம் அவரது படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஸ்ரீரெட்டி இனி மற்றவர்களை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துவார் என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *