விஷாலின் நல்ல நோக்கத்தை பாராட்டும் ராஜபாளையம் மக்கள்..!


விஷால் ஷூட்டிங் நடக்கும் பகுதிகள் என்றால் திருட்டு விசிடி ரெய்டுக்குத்தான் கிளம்புவார் என நினைக்கவேண்டாம்.. மக்களின் பிரச்சனைகளையும் இப்போது கவனிக்க ஆரம்பித்து உள்ளார். அப்படித்தான் தற்போது ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படப்பிடிப்பிற்காக ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டிருக்கும் விஷாலின் கண்களில் அந்த பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பறையை உபயோகப்படுத்தி வரும் அவலம் தென்பட்டுள்ளது..

இதற்கு தன்னாலான முயற்சியாக ஏதாவது உதவி செய்து, மற்றவர்களையும் இந்த உதவிக்கு கைகோர்க்க வைப்போம் என நினைத்த விஷால் ராஜபாளையம் நகராட்சி புதிய ஆணையாளரான தனலட்சுமியுடன் இணைந்து திறந்தவெளி கழிப்பறையை ஒழிக்க ‘மருது’ பட குழுவினர் சார்பாக முதற்கட்டமாக 80 ஆயிரம் ரூபாய் காசேசாலையை அளித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, அடுத்த கட்டமாக ராஜபாளையத்தில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த விஷால், அங்கிருக்கும் தொழிலதிபர்களை இந்த திட்டத்திற்கு தங்களது பங்களிப்பை தந்து உதவுமாறு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.