மகளின் திருமணத்திற்கு கமலுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த ரஜினி


நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளார். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.

திருமணத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் தனக்கு நெருங்கிய நண்பா்கள், பிரபலங்களுக்கு அவரே நேரில் சென்று திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் திருநாவுக்கரசா், இசையமைப்பாளா் இளைய ராஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ உள்ளிட்டோரை ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

மேலும் வியாழன் கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *