வேண்டுகோள் வைத்த ரஜினி ; எச்சரிக்கை செய்த லாரன்ஸ்..!


நேற்று நடைபெற்ற விக்ரம் பிரபுவின் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் ஆகிய மூவருமே ஒரு படத்தை மற்றவர்கள் குறிப்பாக மீடியாக்களும், சோஷியல் மீடியாக்களும் விமர்சிக்கும் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தை பற்றி பேசினார்கள்..

அதில் ரஜினி பேசும்போது, யாரையும் காயப்படுத்தாதீர்கள், உடனே விமர்சனம் செய்யாதீர்கள் என்ற ரீதியில் ஒரு வேண்டுகோள் வைக்கும் விதமாகத்தான் பேசினார். ஆனால் இதே மேடையில் பேசிய ராகவா லாரன்ஸ், ஒரு படத்தின் விமர்சனங்களை படம் வெளியான மூன்று நாட்களுக்குள் விமர்சிக்கத் தடை விதிக்க ஆவண செய்ய வேண்டுமென விஷாலுக்கு கோரிக்கை வைத்தார்.

அதாவது விஷாலிடம் தான் கோரிக்கை.. மற்றவர்களிடம், அதாவது விமர்சிப்பவர்களுக்கோ அது எச்சரிக்கை மாதிரித்தான். லாரன்ஸ் இந்த மாதிரி பேசுவதற்கு சமீபத்தில் அவரது மோசமான படமாக வெளியாகிய ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்குக் கிடைத்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது தான் காரணம்..

நல்ல படங்களை எடுத்தால் யார் விமர்சிக்கப்போகிறார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்..