நீங்க என்ன எம்.ஜி.ஆரா..? ஜெவா..? ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..!


தமிழின கலைஞருக்கு தமிழ் திரை உலகின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இதில் வளர்ந்து வரும் நடிகர்கள் முதல் சினிமா ஜாம்பாவான்கள் வரை அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட இப்போது பதவியில் இருப்பவர்கள் பெரிய ஆட்களா?” என ஒரு பிரம்மாஸ்திரத்தை ஆளுங்கட்சியை நோக்கி வீசி அதிரவைத்துள்ளார்.

இதுபற்றி அவர் கோபமாக பேசிய ரஜினி அவர் பேசும்போது, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலைஞரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றதை ரஜினி சுட்டிக்காட்டினார். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பினார் ரஜினி

மேலும் எடப்பாடி பழனிசாமி என்ன தன்னை ஜெயலலிதாவாகவோ இல்லை எம்.ஜி.ஆராகவோ நினைத்துக் கொண்டு இருக்கிறாரா? என்றும் விளாசினார் ரஜினி. மேலும் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற கெப்பாசிட்டியில் தற்போது யாரும் இல்லை என்று தெரிவித்த ரஜினி கலைஞர் இறுதிச்சடங்கில் முதலமைச்சர் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த அமைச்சரவையும் பங்கேற்று இருக்க வேண்டும் என்றும் பேசினார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *