“சுயநலம் பிடித்தவர்கள் ஓடிருங்க.”; ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி..!


ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருகின்றனர். அனால் அதில் ஒருசிலர், அதை தங்கள் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்திகொள்வதற்காக ரஜினியை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தியதோடு, தேர்தல் நேரங்களில் சில கட்சிகளுடன் இணைந்து வேலைபார்த்து பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது ரஜினியின் லேட்டஸ்ட் அறிவிப்பு..

தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் இனிய நிகழ்வை சூப்பர்ஸ்டார் ரஜினி துவங்கி வைத்தார். இந்தநிகழ்வில் பேசிய ரஜினி, அரசியல் பிரவேசம், இலங்கை பயணம் ரத்து செய்தது என தன்னைப்பற்றி வெளியான விமர்சனங்களுக்கு நாகரிகமாக நாசூக்காக பதிலடி கொடுத்தார்.

முடிவாக தான் ஒருவேளை அரசியலில் நுழைந்தால், தன்னை வைத்து அரசியலில் ஆதாயம் அடையலாம், பணம் சம்பாதிக்கலாம் என நினைப்பவர்களுக்கு தன்னிடம் இடமில்லை என்பதையும், அப்படிப்பட்ட நபர்களை கிட்டேயே சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்றும் ஆணித்தரமாக கூறிய ரஜினி, “அப்படி ஆசை உள்ளவர்கள் யாராவது இருந்தால், தயவுசெய்து இப்பவே ஒதுங்கிடுங்க.. ஏன்னா நிச்சயமா ஏமாந்திடுவீங்க” என சவுக்கை சுழற்றியுள்ளார்..

ரஜினியின் இந்த அறிவிப்பால் சுயநலம் பிடித்து அரசியலில் சம்பாதிக்க நினைத்த அவரது ரசிகர்கள் சிலர் அரண்டுபோயுள்ளனர் என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *