செப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..!


அரசியலுக்குள் இறங்கி அனலை கிளம்பியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி, அடுத்து நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் தான், தான் ஆரம்பிக்கும் கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற காலா திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் பேசியபோதுகூட, கடசி துவங்குவதற்கு இன்னும் ஆண்டவனிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என கூறினார். இந்த வசனத்தை அவர் அவ்வப்போது வழக்கமாக கூறுவது தான் இது என பலரும் நினைத்துக்கொண்டார்கள்..

ஆனால் செப்டம்பரில் கட்சியை துவங்கும் முடிவை ரஜினி ஏற்கனவே எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்தாண்டு, மே மாதம் நடக்க இருக்கும் பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என ரஜினி கணித்திருக்கிறார். அவருக்கு, டில்லி அரசியல் வட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் கூறிய தகவல்களை வைத்து, இப்படியொரு கணிப்புக்கு வந்திருக்கிறார் ரஜினி.

அதனால் அந்த தேர்தலுக்கு தயாராவது போல, தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பாக கட்சித் துவங்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதற்காக, வரும் செப்டம்பர் மாதத்தில் கட்சியை துவக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதை மனதில் வைத்து, தங்களுடன் அவர் பேசி வருவதாக ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவர் டார்ஜிலிங்கில் படப்பிடிப்பில் இருந்தாலும் கடசியின் முக்கிய நிர்வாகிகளுடன் கடசி துவக்கம் குறித்த பணிகளை பேசி வருகிறார் என்றே சொல்கிறார்கள்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *