கபாலியை காரணம் காட்டி அதிகாரியை மிரட்டினாரா எஸ்.வி.சேகர்..?


நடிகர் எஸ்.வி.சேகர், தானும் ஒரு தணிக்கை அதிகாரியாக இருந்தாலும் கூட, தான் தயாரித்து தனது மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள ‘மணல் கயிறு-2’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெற சென்றபோது, அந்தப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகத்தான் சென்றாராம்.. படம் பார்த்துவிட்டு முடித்துவிட்டு எஸ்.வி.சேகரை அழைத்த தணிக்கை அதிகாரி மதியழகன். “நாங்கள் யு/ஏ கொடுத்திருக்கிறோம்” என்றாராம்..

ஆனால் இது ‘யு’ சான்றிதழுக்கான படம். நீங்கள் எந்த அடிப்படையில் ‘யு/ஏ’ சொல்கிறீர்களோ, அதற்கு உண்டான அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். நியாயம் கிடைக்காவிட்டால், தேவைப்பட்டால் உயர்நீதிமன்றம் செல்வேன்” என்ற எஸ்.வி.சேகர், திடீரென ‘கபாலி’யை இதில் உள்ளே இழுத்தாராம்.

அதாவது வன்முறைகள் அதிகம் நிறைந்த ‘கபாலி’ படத்துக்கு எதன் அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுத்தீர்கள் என நீதிமன்றத்தின் மூலமாகவே தெரிந்துக் கொள்வேன். அதற்குப் பிறகு என்னுடைய படத்தை நீதிபதியே பார்க்கட்டும் எனச் சொல்வேன். பார்த்தப் பிறகு அவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஒப்புக் கொள்வேன்” என்றும் பதில் கூறினாராம்..

இதனால் ஆடிப்போன தணிக்கை அதிகாரி மதியழகன், எஸ்.வி.சேகரை கூல் பண்ணும் விதமாக தாங்கள் அளித்த ‘யு/ஏ’ சான்றிதழுக்கான ஒவ்வொரு விஷயமாக சொன்னாராம். ஆனால் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் எஸ்.வி.சேகர் சட்டப்பூர்வமாக பதில் சொன்னாராம். இறுதியாக ‘மணல் கயிறு-2’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துவிட்டது.. எஸ்.வி.சேகரின் இந்த செயலை சிலர் மிரட்டல் என்கிறார்கள். சிலர் இதுதான் சரியான, சட்டபூர்வமான அணுகுமுறை என்கிறார்கள்.