“சித்தார்த்துக்கு போட்டியாக களம் இறங்கிய சமந்தா..!


சித்தார்த்தும் சமந்தாவும் கா’ விட்டுத்தான் வெகு நாட்கள் ஆகிறதே.. இனி என்னய்யா போட்டி என்கிறீர்களா..? மேலோட்டமாக பார்த்தால் அப்படி தெரியாது தான். ஆனால் விஷயம் இருக்கிறது.. இயக்குனர்கள் தனக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களை தருவதில்லை என்கிற கோபமும் வருத்தமும் சமந்தாவிற்கு நிறையவே இருக்கிறது..

நீங்க தராட்டி என்ன.. நானே வாய்ப்பை உருவாக்குகிறேன் என திட்டமிட்ட சமந்தா கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘யு டர்ன்’ என்கிற படத்தின் ரைட்ஸை வாங்கிவைத்துவிட்டார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தானே நடிப்பதோடு தயாரிப்பிலும் இறங்க இருக்கிறார்..

தனது முன்னாள் காதலர் சித்தார்த்துக்கு போட்டியாக தயாரிப்பாளராக இறங்குகிறார் என்கிற அர்த்தத்தில் கூட நீங்கள் இதை பார்க்கலாம். அதற்கும் மேலாக இந்தப்படத்திற்கான ரைட்ஸை ஒரு கன்னட இயக்குனரிடம் இருந்து வாங்கியுள்ளார் அல்லவா, அந்த இயக்குனரின் முதல் படமான ‘லூசியா’ என்கிற கன்னட படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி படமாக எடுத்து நடித்தவர் சாட்சாத் சித்தார்த் தான்.. படம் எனக்குள் ஒருவன்.. இப்போது புரிகிறதா போட்டி என்னவென்று..?