சமந்தா புகைப்படம் லீக் ; யார் இந்த வேலையை பார்த்தது..?


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகிய முன்னணி மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும் திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் சமந்தா.

தற்போது தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். பணக்கார வீட்டுப் பெண்ணாக சமந்தா நடிப்பதாகவே படக்குழுவினர் சிலர் கேட்டதற்கு சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால், சில நாட்களாக அப்படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதைப் புரிய வைக்கும் சில புகைப்படங்கள் திடீரென லீக்காகின. சமூக வலைத்தளங்களிலும் அது வைரலானது. படம் வெளிவருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் சமந்தா கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்த படக்குழுவினருக்கு அந்த சஸ்பென்ஸ் இப்போதே உடைந்துவிட்டது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அதனால், அந்தப் புகைப்படம் லீக் ஆனது குறித்து ஐதராபாத், சைபர்கிரைம் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து இது போன்று மேலும் புகைப்படங்களோ, அல்லது படம் சம்பந்தப்பட்டத் தகவல்களோ வெளிவந்தால் அது தங்களது படத்தைப் பெரிதும் பாதிக்கும் என அந்தப் புகாரில் கூறியுள்ளார்கள்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *