சிம்புவுக்கு வக்காலத்து வாங்கும் சந்தானம்..!


சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.. இந்தநிலையில் வரும் டிச-22ஆம் தேதி சக்க போடு போடு ராஜா’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க, விவேக் ரோபோ சங்கர், பவர்ஸ்டார், மயில்சாமி, விடிவி கணேஷ் உள்ளிட்ட நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை, விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

சிம்பு இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிச-6ஆம் தேதி நடைபெறுகிறது.. தற்போது தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் சிம்புவால் தான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக கூறியுள்ள நிலையில், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு அதுகுறித்த விளக்கம் அளிக்க இருக்கிறார் என சந்தானம் சிம்புவுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *