சசிகுமாருக்கு ஒரு ‘போலி’ பார்சல்..!


பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள தாரை தப்பட்டை படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்த நேரத்தில் சசிகுமார் ட்விட்டர் கணக்கு ஒன்றை புதிதாக் ஆரம்பித்து அதில் ‘தாரை தப்பட்டை’ படம் பற்றிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ஆனால் இதுபற்றி சசிகுமாரிடம் கேட்டால் தனக்கு சோஷியல் மீடியாவில் கணக்கே இல்லை என்கிறார்.

“சமூக வலைதளத்துக்கும் எனக்கும் ரொம்ம்ப தூரம் பாஸ். அதெல்லாம் என்னால் மெயின்டெயின் பண்ணமுடியாதுன்னு பேஸ்புக், ட்விட்டர் எதுலயும் எனக்கு அக்கவுன்ட்டே வச்சுக்கலை.. இப்ப என் பேர்ல இருக்கிறது போலியான ஆளுங்க” என்கிற சசிகுமார், அந்த போலிகள் ஏடாகூடமாக ஏதாவது செய்திகளை பரப்பிவைப்பதற்குள் சசிகுமார் முழித்துக்கொண்டு அவர்களை முடக்குவது நல்லது.