அந்தம்மா தான் வரமாட்டாங்க.. இந்த அய்யாவாவது வருவாரா..?


பீப் சாங் விவகாரத்தில் சிக்கிய சிம்பு உள்ளூரில் இருக்கிறாரா, இல்லை வெளியூருக்கு எஸ்கேப் ஆகிட்டாரா என்கிற சந்தேகமே ஈனு தீர்ந்தபாடில்லை… ஆனால் ஒன்று, எங்கிருந்தாலும் கைதி போல ரூமுக்குள்ளேயே தான் அடைந்துகிடக்க வேண்டும்..

இப்ப லேட்டஸ்ட் தகவலா சிம்பு, நயன்தாரா நடிச்சு பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தோட ஆடியோவை வரும் பிப்-3ஆம் தேதி ரிலீஸ் பண்ணப்போறாங்க…நயன்தாரா தன்னோட எந்தப்பட ஆடியோவுக்கும் வந்ததா சரித்திரம் இல்ல.. அதனால அவரை பத்தி பேசவேண்டாம்.

ஆனா இது சிம்புவோட சொந்தப்படம்.. இதுக்கு சிம்பு வந்துதானே ஆகணும்.. கிட்டத்தட்ட இரண்டு மாதமாக வெளியே தலைகாட்டாத சிம்பு இந்த விழாவுக்கு வந்து தனது தைரியத்தையும் நேர்மையையும் நிரூபிக்கவேண்டும் என்பதுதான் இன்னும் கூட சிம்புவை நம்பிக்கொண்டு இருக்கும் அவரது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. அவர் வருவாரா..?