சந்தானத்திற்கு ஜோடியான ஷெரின்.!

santhanam_sherin_pair_nanbenda_movie

உதயநிதி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் நண்பேன்டா. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார் மேலும் வழக்கம்போல் உதயநிதிக்கு ஒத்து ஊதும் காமெடியனாக சந்தானமே நடித்துக் கொண்டிருக்க இவருக்கும் ஜோடி வேண்டும் அடம்பிடித்து தற்போது ஒரு நடிகையை புக் செய்திருக்கிறார்கள். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தமிழில் பல படங்கள் நடித்த ஷெரின் தான் அந்த இரண்டாவது கதாநாயனான சந்தானத்திற்கு ஜோடி…

இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக இருந்த ஜெகதீஷ் இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். குருவின் சாயல் கொஞ்சம்கூட இதில் இருக்காதாம், படத்தின் கதை சந்தானத்தை சுற்றியே நடக்கிறது. இதற்காக இந்த படத்திற்கு 40 நாட்கள் கால்ஷிட் கொடுத்திருக்கிறார் சந்தானம். அதாவது படத்தின் கதை என்று பார்த்தால் சந்தானம் ஷெரினை காதலிப்பாராம் ஒருதலையாக, இந்த காதலை ஒன்று சேர்க்க உதயநிதி ஹெல்ப் செய்வாராம் இடையில் நயன்தாராவுடன் லவ் என்று கலவையாக காமெடியை மிக்ஸ் செய்து கொடுக்கப்போகிறார்கள்…