கயலை பாராட்டிய சிவகார்த்திகேயன்

 

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்  வெளியிட்டுள்ள படம் “கயல்”. “மைனா”, “கும்கி” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இந்த படத்தை இயக்க, D.இமான் இசை அமைத்துள்ளார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இரண்டு திரைப்படங்கள் நடித்துள்ள சிவகார்த்திகேயன் (வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மான் கராத்தே) “கயல்” படத்தை பார்த்த உடன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கயல் ஒரு உணர்ச்சிபூர்வமான காதல் திரைப்படம், பிரபு சாலமன் மற்றும் அவரது குழு இமானின் இசையை உதவியாகக்கொண்டு படத்திற்கு உயிர் தந்துள்ளனர்.

சந்திரன், ஆனந்தி மற்றும் வின்சென்ட் அவர்களுக்கு தந்துள்ள கதாபாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.