சிம்புவுக்கு மைக்கேல் ராயப்பனால் மீண்டும் சிக்கல்


காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன பொண்ணை திருப்பூருக்கு போய் தரதரவென இழுத்து வருவார்கள்.. ஆனால் ஓடிப்போன அந்தப்பெண்ணை கட்டிக்க ஓராயிரம் பேர் போட்டிக்கு நிற்பார்கள்.. ஊர் உலகத்தில் நாம் பார்க்கததா..?

அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படத்தின் தயாரிப்பாளரை சிம்பு அலைக்கழித்து நட்டத்தில் தள்ளியதை பார்த்தபோது, இனி சிம்புவை வைத்து யாருமே படம் தயாரிக்க வரமாட்டார்கள் என்கிற சூழல் தான் நிலவியது. ஆனால் அப்படியே உல்டாவாக மணிரத்னம் படம், நரகாசூரன் இயக்குனரின் அடுத்த படம், என ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சிம்பு.

சிம்புவால் கோடிகளை பறிகொடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சும்மா இருப்பாரா.. தயாரிப்பாளர் சங்கத்தில் திரும்பவும் முறையிட்டு கதறியுள்ளார். எனக்கு தரவேண்டிய நஷ்ட ஈடை தந்து செட்டில் செய்யும் வரை சிம்பு வேறெந்த படத்திலும் நடிக்க தடை விதிக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *