நள்ளிரவில் பிறந்தநாள் வாழ்த்து ; ஹன்ஷிகாவை இன்னும் மறக்காத சிம்பு..!

“இந்த ரெண்டு வருஷத்துல கிட்டத்தட்ட எல்லாமே என்னை விட்டு போயிருச்சு.. கஷ்டத்துல, கூட நிக்கவேண்டிய, நான் காதலிச்ச பொண்ணு கூட என்ன விட்டு போயிட்டா..” – சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ இசைவெளியீட்டு விழாவில் சிம்பு தனது (முன்னாள்) காதலியை பற்றி, அதாவது ஹன்சிகாவை பற்றி பேசியது இதுதான்..

ஆனால் இப்போதோ ஹன்ஷிகாவின் பிறந்தநாளன்று டிவிட்டரில் அவருக்கு வாழ்த்துச்சொல்லி இருந்தார் சிம்பு.. ஏன் நட்பு ரீதியாக வாழ்த்து சொல்லக்கூடாதா என நீங்கள் நினைக்கலாம். தாராளமாக சொல்லலாம். ஆனால் வாழ்த்து சொன்ன நேரம் என்னவென்று தெரியுமா..? சரியாக 12 மணி.. ஒரு நிமிடம் கூடவும் இல்லை.. குறையவும் இல்லை…

தன்னை மறந்துவிட்டுப்போன காதலிக்கு, நானும் மறந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிற நபர், பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்லுகிறார் என்றால் என்ன அர்த்தம்..? சிம்புவுக்குள் இன்னும் ஹன்ஷிகாவுடனான காதலை மறக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்..?

விடியற்காலை 5 மணிக்கு ஹன்ஷிகாவும் அதற்கு நன்றி தெரிவித்து பதில் போட்டிருந்தார் என்பது இன்னொரு உபரி தகவல்.