சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம்!


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் நடிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் திரைப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் கடந்து 2018 ஆம் ஆண்டு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சிலபல பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் பாதியிலேயே தடைபட்டு நின்றது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் பேசி சுமூக முடிவு எட்டப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இயக்குனர் ரவிகுமார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார்.