தெலுங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்


தமிழ் படங்களுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழில் வெளியாகும் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படமும் தற்போது தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தை இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான மித்ரன் இயக்கினார். நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அர்ஜுன், இந்தி நடிகர் அபய் தியோல், இவானா ஆகியோரும் நடித்து இருந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் திறமை எப்படி அழிக்கப்படுகிறது என்ற திரைக்கதையில் தயாராகி இருந்தது.

தற்போது தெலுங்கில் தயாராகும் இத்திரைப்படத்திற்கு “சக்தி” என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இம்மாத இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.