அடடே சூரி இப்படியெல்லாம் கூட செய்வாரா..?


கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் கரையை கடந்து ஒரு மாதமான நிலையிலும் அது ஏற்படுத்திவிட்டுச் சென்ற பாதிப்புகள் இன்னும் அகலவில்லை. இன்னும் லட்சகணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து, தங்களுக்கென வைத்திருந்த விளை நிலங்களையும் பறிகொடுத்து அடுத்து என்ன செய்வதென்றெ தெரியாமல் பரிதவித்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, கஜா புயலால் பெரும் பாதிப்பை சந்தித்த டெல்டா மாவட்ட மக்களுக்குக்கு பல தன்னார்வலர்களோடு சேர்ந்து நடிகர் சூரியும் உதவிக்கரம் நீட்டினார். அப்போது ஊருக்குள் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிப்போய்விட்டது என கண்கலங்கி அவர் பேசிய வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அப்போது அங்கிருந்த பாட்டி ஒருவர், நடிகர் சூரியிடம் சென்று, புயல்ல என் போன் தொலைஞ்சதால பேரன்கிட்ட பேச முடியலை” என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக சென்னை வந்த சூரி, அந்த பாட்டி கூறியதை நினைவில் வைத்து, ஒரு செல்போனும் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி இருக்கிறார். நடிகர் சூரியின் இந்த குணத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *