தமிழ் இயக்குனரை அறைவேன் என மிரட்டிய நடிகை


தெலுங்கு, தமிழ் சினிமாவில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. பொதுவாக பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்கள் மீது அனைவர்க்கும் அனுதாபம் ஏற்படுவதும், அவர்களை இந்தநிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது கோபம் ஏற்படுவதும் தான் வழக்கம்.

ஆனால் ஸ்ரீரெட்டி மீது திரையுலகில் உள்ளவர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ அப்படி எதுவும் அனுதாபம் ஏற்பட்டதாக தெரியவில்லை. காரணம் தான் பாதிக்கப்பட்டது குறித்து போலீஸாரிடம் செல்லாமல் விளம்பரம் தேடி வருகிறார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் அடுத்த கட்டமாக, “நடிகை ஸ்ரீரெட்டி, திரையுலக பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான வராகி.

இதனை பொறுக்க முடியாத ஸ்ரீரெட்டி, வராகிக்கு ஸ்ரீரெட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், “அவதூறாக பேசிய வராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க நீங்கள் தகுதியானவர் தான். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

இப்போதும் கூட ஸ்ரெட்டி போலீசில் சென்று தன்னை ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்க முன்வராதது அவர் மீதான சந்தேகத்தை அதிகரிக்கவே செய்கிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *