புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் சீமானை முற்றுகையிட்ட மாணவர்கள்

seeman_news

இலங்கை தமிழர்களின் அந்த கொடூரமான காலக்கட்டங்களை சித்தரிக்கும் விதமாக பல படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு பல தமிழீழ ஆதரவாளர்கள் உதவியுடன் உலகெங்கும் படத்தை திரையிட முயல்கிறார்கள். ஆனால் விளைவு படத்தை பார்க்கும்போது தான் தெரிகிறது. இந்தியா செய்த நம்பிக்கை துரோகத்தையும், இலங்கை அரசின் கொடூரமான முகத்தை கிழிக்கும் விதமாக படம் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தால் அவர்கள் இலங்கைக்கு சொம்பு தூக்கிக் கொண்டுதான் படத்தையே எடுக்கிறார்கள். இதில் சில மாதத்திற்கு முன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இனம்’ படம் சிறந்த உதாரணம். பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து கொதித்து போனார்கள். விளைவு, படம் உலகில் எங்கேயும் திரையிட முடியாதபடி ஆனது.

தற்போது மீண்டும் அதே நிலை புலிப்பார்வை படத்திற்கு வந்திருக்கிறது. இன்று காலை சத்யம் திரையரங்கில் புலிப்பார்வை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் நம் மனதை கொஞ்சம் அதிர வைத்தது என்றே சொல்ல வேண்டும். இப்படத்தில் பிரபாகரனின் மகனை ஒரு போராளியாக, அதுவும் இளவயது போராளியாக சித்தரிக்கப்பட்டு காட்சிகள் ஒளிபரப்பினார்கள். இதனை கண்ட சில மாணவர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அவர்கள் கூச்சலிட்டு மேடையை நோக்கி நடந்து வந்தனர். இதனை கண்ட சீமான் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர். சீமானின் இந்த துரோகத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். சீமானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினார்கள்..

உடனே அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அந்த மாணவர்களை அடித்து இழுத்துக் கொண்டு திரையரங்கை விட்டு வெளியே கொண்டு சென்று லத்தியில் பொளந்து எடுத்தனர். அதன்பின் அவர்களை வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர்.

இத்தனைக்கும் கோஷம் எழுப்பிய மாணவர்கள் நாம் தமிழர் கட்சியினரே… இவ்வளவு நடந்தும் மேடையில் அமைதியாக தண்ணீர் குடித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சீமான். என்னத்த சொல்ல…!