கீர்த்தி சுரேஷை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!


மகாநடி என்ற படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேசுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.

நடிகை கீர்த்தி சுரேசுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார் தலைமையில் கேக் வெட்டி கீர்த்தி சுரேசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் தலைவர் 168 படக்குழுவினர்.